மதுரை: மதுரையில் 20 முதல் 50 வயதை உடையவர்களே அதிகமாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 29ஆம் தேதி வரை மதுரை மாநகராட்சியில் 1,627 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 1 முதல் 20 வயதுள்ளோர் எண்ணிக்கை 172ஆகவும் 21 முதல் 50 வயதினர் 1,017 பேர், அதற்கு மேற்பட்டவர்கள் 438 பேராக வும் உள்ளனர். இள வயதினரே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதார அதிகாரிகள் கூறுகையில், "கொரோனா கிருமி முதியவர்கள், பிறநோய் இருப்ப வர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். இது வயது வேறுபாடின்றி தாக்கும். இளவயதினர் கவனக்குறை வாக இருக்க வேண்டாம். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள்,'' என்றனர்.

