சிறுமி பாலியல் வன்கொடுமை; கொலை; கைதி வாக்குமூலம்

2 mins read
2c3ecb65-a6c7-485b-9a62-7dfe4945ed77
கொலை குற்றத்தை எதிர்நோக்கும் ராஜா. படம்: ஊடகம் -

அறந்தாங்கி: ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததைக் கண்டித்து பல்வேறு கட்சியினரும் அமைப்பு களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நடந்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி ராஜா என்பவர் கைதானார்.

இதற்கிடையே, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற் கூறு ஆய்வு முடிந்த நிலையில் சிறுமியின் உடலை வாங்க மறுத்து, நீதி கேட்டு, ஏம்பல் காவல் நிலை யம் முன்பு சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கள் உள்ளிட்ட கட்சியினரும் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், "சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர துரித நட வடிக்கை எடுக்குமாறு உத்தரவிட் டுள்ளேன். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்," என்று தெரி வித்துள்ளார்.

"கடந்த 30ஆம் தேதி கறம்பவயல் காளி கோவிலுக்கு மாலை கொடுக் கச் சென்றேன். அப்போது சிறுமி யிடம் 'கோவிலுக்குப் போகிறேன், நீ வந்தால் பொங்கல் வாங்கித் தருகிறேன்' என்றேன். என்னுடன் வந்த சிறுமியை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அழைத்துச் சென்றபோது, சிறுமி அழுது சத்தம் போட்டதால், யாராவது அங்கு வந்து விடு வார்களோ என்ற பயத்தில் சிறுமி யின் கழுத்தை நெரித்துக் கொன்றேன். பின்னர் சிறுமியை செடிகள் நிறைந்த வாய்க்காலில் போட்டுவிட்டு சென்றுவிட்டேன்," என்று நடந்த சம்பவம் தொடர்பாக ராஜா வாக்குமூலம் அளித்ததாக போலிசார் கூறினர்.