அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொவிட்-19

மதுரையில் வேகமாக பரவி வரும் கொரோனா கிருமியால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இருப்பினும், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.