சாத்தான்குளம்: மக்களிடம் விசாரணை நடத்த திட்டம்

தூத்­துக்­குடி: சாத்­தான்­கு­ளத்­தில் ஜெய­ராஜ் அவ­ரது மகன் பென்­னிக்ஸ் என்ற இரு­வ­ரும் போலிஸ் நிலை­யத்­தில் அடித்து கொல்­லப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் விவ­கா­ரம் தொடர்­பில் பொது­மக்­க­ளி­டம் நேர­டி­யாக விசா­ரணை நடத்த சிபி­சி­ஐடி போலி­சார் திட்­ட­மிட்டுள்ளனர்.

தந்தை, மகன் இரு­வ­ரும் தாக்­கப்­பட்ட விவ­கா­ரத்தைக் கொலை வழக்­கா­க போலி­சார் மாற்றி இருக்­கி­றார்­கள். இதன்­ தொ­டர்­பில் மொத்­தம் ஐந்து போலிஸ் அதி­கா­ரி­கள் கைதாகி சிறை­யில் அடைக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

அந்த ஐவ­ரை­யும் காவ­லில் எடுத்து விசா­ரிக்க போலி­சார் முடிவு செய்து இருக்­கி­றார்­கள். இதோடு ஜெய­ராஜ், பென்­னிக்ஸ் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டதை நேரில் பார்த்த பொது­மக்­க­ளி­டம் விசா­ரணை நடத்­த­வும் போலி­சார் திட்­ட­மி­டு­கி­றார்­கள்.

கொலை­யுண்ட வியா­பா­ரி­க­ளின் உற­வி­னர்­கள், பொது­மக்­கள், கடைக்­கா­ரர்­கள் பல­ருக்­கும் குறுஞ்­செய்தி மூலம் அழைப்பு விடுத்து இந்த விசா­ரணை நடத்­தப்­படும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ்’ என்ற அமைப்­பைச் சேர்ந்­த­வர்­க­ளை­யும் அதி­கா­ரி­கள் விசா­ரிக்கிறார்கள்.

இந்­நி­லை­யில், கடை­சி­யாக கைது செய்­யப்­பட்ட முத்­து­ராஜ் என்­ப­வர் ஏற்­கெ­னவே அர­சி­னர் சாட்­சி­யாக மாறி­விட்­டார் என்று வெளி­யான தக­வல்­களை சிபி­சி­ஐடி அதி­கா­ரி­கள் மறுத்­த­னர்.

முத்­து­ராஜை முன்னதாகவே தாங்­கள் பிடித்து வைத்­தி­ருந்­த­தாகக் கூறப்­ப­டு­வ­தை­யும் அவர்­கள் மறுத்­த­னர்.

இவ்­வே­ளை­யில், சாத்­தான்­கு­ளம் சம்­ப­வம் தொடர்­பில் ஸ்ரீதர் என்ற போலிஸ்­கா­ரரை சிபி­சி­ஐடி போலி­சார் கைது செய்­த­போது, ஸ்ரீதர் அதி­முக அமைச்­சர் ஒரு­வ­ருக்கு மிக­வும் நெருக்­க­மா­ன­வர் என்­ப­தால் அவர் மீது கைவைக்க வேண்­டாம் என்று சிபி­சி­ஐடி போலி­சா­ருக்கு மிரட்­டல் விடுக்­கப்­பட்­ட­தா­கத் தகவல்­கள் வெளி­யா­யின.

அந்த அமைச்­சர் தூத்­துக்­குடி மாவட்­டத்­தைச் சேர்ந்த கடம்­பூர் ராஜூ என்­றும் பேச்சு அடி­பட்­டது.

ஆனால் இதை திட்­ட­வட்­ட­மாக மறுத்­து­விட்ட கடம்­பூர் ராஜூ, சாத்­தான்­கு­ளம் வழக்­கில் கைதான போலிஸ்­கா­ரர் ஸ்ரீத­ருக்­கும் தனக்­கும் எந்­த­வித தொடர்­பும் இல்லை என்று குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, சாத்­தான்­கு­ளம் கொலை விவ­கா­ரம் பர­ப­ரப்­பாக வெளி­யா­ன­போது திடீ­ரென விடுப்­பில் சென்ற வினிலா என்ற அரசு மருத்­து­வர், இப்­போது மீண்­டும் ஒரு மாதம் விடுப்­பில் சென்­று­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிபி­சி­ஐடி போலி­சார் அவ­ரி­டம் விசா­ரணை நடத்தி வந்த நிலை­யில் திடீ­ரென அந்த மருத்­து­வர் விடுப்­பில் போய்­விட்­டார். சாத்­தான்­கு­ளம் காவல்­நி­லை­யத்­தில் இருந்து சென்ற மாதம் 20ஆம் தேதி ஜெய­ராஜ், பென்­னிக்ஸ் இரு­வ­ரும் கோவில்­பட்டி போலிஸ் நிலை­யத்­துக்குக் கொண்டுசெல்­லப்­பட்­ட­னர்.

அப்­போது அந்த இரு­வ­ரின் உட­லி­லும் அதிக ரத்தக் கசிவு ஏற்­பட்டு இருந்­தது. என்­றா­லும் அந்த இரு­வ­ரை­யும் கோவில்­பட்டிக்கு அழைத்­துச் செல்­லும் அள­விற்கு அவர்­களின் உடல்­ந­லம் நன்றாக இருக்­கிறது என்று கூறி மருத்­து­வர் வினிலா தகு­திச் சான்­றி­தழ் அளித்­தார் என்­பது தெரி­ய­வந்­தது.

கைதான போலிஸ் அதிகாரிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றார் அமைச்சர் ராஜூ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!