எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கிருமித்தொற்று

எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கிருமித்தொற்று

1 mins read
338a27b3-10a5-4b3c-9b22-1774a5735a15
கோவை தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுண -

கோவை: கோவை தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொவிட் 19 கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி யுள்ளது. அவர் தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, அவருடைய மகள், மருமகன், பேத்தி ஆகியோர் மதுரை சென்று திரும்பிய நிலையில், அவர்க ளுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது எம்எல்ஏவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

தமி­ழ­கத்­தைப் பொறுத்தவரை ஏற்­ கெ­னவே திமு­க­வைச் சேர்ந்த ஜெ.அன்­ப­ழ­கன் கிரு­மித்­தொற்­றால் பலி­யா­னார். இதைத்­தொ­டர்ந்து திமு­கவைச் சேர்ந்த எம்­எல்­ஏக்­கள் வசந்­தம் கார்த்­தி­கே­யன், செஞ்சி மஸ்­தான், ஆர்.டி.அரசு, அதி­மு­க­வைச் சேர்ந்த உயர் கல்­வித்­துறை அமைச்­சர் கே.பி.அன்­ப­ழ­கன், பர­மக்­குடி, உளுந்­தூர் பேட்டை தொகுதி அதி­முக எம்­எல்­ஏக்­க­ளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்­பட்டு இருப்­ப­தால் அவர்­க­ள் அனைவரும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.