பாதிப்பு குறைந்ததால் ஆறுதல் அடைந்துள்ள சென்னை மக்கள்

பாதிப்பு குறைந்ததால் ஆறுதல் அடைந்துள்ள சென்னை மக்கள்

2 mins read
ac515ff9-74c1-4d59-9deb-47212bb9f025
சென்னை மக்களுக்கு ஆறு­தல் அளிக்­கும் விஷயமாக நேற்று 1,713 பேருக்கு மட்­டுமே இத்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது. இது வழக்­க­மான எண்­ணிக்கையை விட மிக­வும் குறை­வா­கும். அத்­து­டன் கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 1,000 பேருக்கு மேல் குணம் பெற்று இல்­லம் திரும்­பி­னர். படம்: ஏஎப்பி, அருண் சங்கர் -

சென்னை: தமி­ழ­கம் எங்­கும் கொவிட்-19 உயிர்க்­கொல்லி கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படு பவர்­க­ளின் எண்­ணிக்கை நாளும் அதி­க­ரித்து வரு­கிறது. ஆனால், இந்­தப் பாதிப்பு சென்னை மாந­க­ரில் வழக்­கத்தை விட­வும் சற்றே மட்­டுப்­பட்­டுள்­ள­தால் மக்­கள் ஆறு­தல் அடைந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் தற்­போது தின­மும் 4,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு கிருமி பரவி வரு­கிறது.

தலை­ந­க­ரான சென்­னை­யில் கடந்த 10 நாட்­க­ளுக்­கும் மேலாக தின­மும் 2,000 பேருக்கு மேலான நோயா­ளி­கள் பாதிக்­கப்­பட்டு வந்தனர். இதன்­ கா­ர­ண­மாக சென்னையில் மட்­டும் பாதிப்பு எண்­ணிக்கை 68,000ஐ தொட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், சென்னை மக்களுக்கு ஆறு­தல் அளிக்­கும் விஷயமாக நேற்று 1,713 பேருக்கு மட்­டுமே இத்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது. இது வழக்­க­மான எண்­ணிக்கையை விட மிக­வும் குறை­வா­கும். அத்­து­டன் கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 1,000 பேருக்கு மேல் குணம் பெற்று இல்­லம் திரும்­பி­னர்.

இந்­நி­லை­யில், ஊர­டங்­கால் கொரோனா பாதிப்பு குறைந்­துள்ளதாக சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

"கொவிட் -19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் அதி­கம் உள்ள மாவட்­டங்களான சென்னை, திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு, காஞ்­சி­புரம் ஆகிய 4 மாவட்­டங்­க­ளி­லும் முழு­ஊ­ர­டங்கு அம­லில் உள்­ளது. அதே­போல் மதுரையில் அறி­விக்­கப்பட்­டி­ருந்த முழு ஊர­டங்­கும் மேலும் 7 நாட்­கள் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"சென்­னை­யில் கொரோனா பாதிப்பு குறைந்து வரு­வது தற்கா லிக வெற்­றி­தான். பிற மாவட்­டங்­களில் பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாகச் சொல்­வதை விட­வும் அதை தடுக்­கும் வழி­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும்.

"மதுரை, கட­லூர், வேலூர், திரு­வண்­ணா­மலை, ராணிப்­பேட்­டை­யில் பரி­சோ­தனை கள் அதி­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. கொரோனா தடுப்பு முறை­களை கட்­டா­யம் கடைப்­பி­டிக்க வேண்­டும்," என ராதா­கிருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.