முன்னாள் அமைச்சர் வளர்மதி மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் வளர்மதி மருத்துவமனையில் அனுமதி

1 mins read
a00e5b50-a73e-4c7e-b511-b18436939d45
முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிகொரோனா சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படம்: ஊடகம் -

சென்னை: கொவிட்-19 கிருமிப் பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆங்காங்கே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமி­ழ­கத்­தைப் பொறுத்தவரை ஏற்கெ­னவே திமு­க­வைச் சேர்ந்த ஜெ.அன்­ப­ழ­கன் கிரு­மித்­தொற்­றால் பலி­யா­னார். இதைத்­தொ­டர்ந்து திமு­கவைச் சேர்ந்த எம்­எல்­ஏக்­கள் வசந்­தம் கார்த்­தி­கே­யன், செஞ்சி மஸ்­தான், ஆர்.டி.அரசு, அதி­மு­க­வைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்­ப­ழ­கன், பழனி, சதன் பிரபாகரன், குமரகுரு, அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்ட எம்­எல்­ஏக்­க­ளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்­பட்டு இருப்­ப­தால் அவர்­கள் அனைவரும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.