சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கை ஏற்று நடத்த சிபிஐ ஒப்புதல்

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கை ஏற்று நடத்த சிபிஐ ஒப்புதல்

1 mins read
f612afd0-742a-4979-989e-1fb743092311
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. படம்: இந்திய ஊடகம் -

சாத்தான்குளத்தில் போலிசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

சாட்சியங்களும் தடயங்களும் அழிக்கப்படலாம் என்ற அச்சத்தில், சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.

அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, இதுவரை 5 பேரை கைது செய்துள்ளது.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.