தந்தை-மகன் மரணம்: கட்டுரை வெளியீடு

தந்தை-மகன் மரணம்: கட்டுரை வெளியீடு

1 mins read
7bf9b60c-73f6-4c34-9632-8bac8a55c767
படம்: ஊடகம் -

சாத்தான்குளம்: தூத்துக்குடி, சாத்தான் குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கள ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், சாத்தான் குளம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது கைவைத்து தள்ளிய தால் ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் கடுமை யாக தாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்னிக்சை உள்ளாடையோடு நிறுத்தி இரு கைகளையும் விரித்து அவரது முகத்தை சுவரில் பதித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மேலும் சில காவலர்களும் லத்தியால் பின்புறம் சரமாரியாக அடித்ததாகவும் பென்னிக்சை அடிப்பதை பார்த்த தந்தை ஜெயராஜ் கதறி அழுது, கெஞ்சிகேட்டும் விடாத நிலையில், அவர் போலிசாரை திட்டியதால் ஜெயராஜை யும் லத்தியால் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் கதறி அழுதது காவல்நிலையத்திற்கு வெளியேயும் கேட்டதாக வேணுகோபால் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.