மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5,000ஐ கடந்தது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

சென்னையில் மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 4,674 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 335 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,009 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 1,111 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கிருமித்தொற்று அதிகரித்து வந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது ஆறுதலான விஷயம்.