வாடகை கேட்ட வீட்டுக்காரர் கொலை

வாடகை கேட்ட வீட்டுக்காரர் கொலை

1 mins read
397f820e-1d77-4c98-82ac-cbb168b306ab
-

குன்றத்தூர்: தனது வீட்டுக் கான வாடகையைத் தரும்படி கேட்டதால் கோபமடைந்த ஆட வர் ஒருவர், வீட்டு உரிமை யாளர் பயந்து ஓடியும் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவத்தால் குன்றத்தூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான குணசேகரன், குன்றத்தூரில் இரு வீடுக ளைக் கட்டியுள்ளார். ஒரு வீட்டை அஜித் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு, மற்றொரு வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கால் வேலையின்றி இருந்துள்ள அஜித், கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், குணசேகரன் அஜித் வீட்டிற் குச் சென்று வாடகை கேட்டு உள்ளார். அப்பொழுது வீட்டில் அஜித் இல்லாததால் குண சேகரனுக்கும் அஜித் குடும் பத்தாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அஜித், விஷ யம் கேள்விப்பட்டு, ஆத்தி ரத்துடன் கத்தியால் குண சேகரனை குத்திக் கொன் றார். அஜித் கைதானார்.