அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொவிட்-19 பாதிப்பு

சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

ஏற்கெனவே அமைச்சர் தங்கமணி கொவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் இவர்கள் இருவரைத் தவிர மேலும் 8 எம்எல்ஏக்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4ஆம் தேதிதான் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொவிட்-19 நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.