அம்பத்தூர்: சென்னை மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணமாகவே கொரோனா கிருமிப் பரவல் பாதிப்பு குறையத் தொடங்கி யுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைக்கப் பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத் தில் கிருமிப் பரவலை முறியடிக்க போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதி மேம் படுத்தப்பட்டு வருகிறது.
"சென்னையைப் பொறுத்தவரை முழு ஊரடங்கின் காரணமாகவே தொடர் பாதிப்பு இப்போது ஒரு கட்டுக்குள் வந்துள்ளது.
"பரிசோதனை கூடுதலாக செய்யப்பட்டது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்.
"பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றினார்கள்.
"ஊரடங்குக்குப் பின்னரும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும்," என்று அவர் கூறினார்.
சென்னை மக்களின் முழு ஒத்துழைப்பால் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கி உள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை குடியிருப்பாளர்களிடம் கொவிட்-19 கிருமித்தொற்று அறிகுறிகள் குறித்து கேட்டறியும் திருநங்கைகள். இப்பணியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஈடுபட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளாா். படம்: ஏஎஃப்பி

