'10 ரூபாய் சாப்பாடு தாத்தா' மறைவு

'10 ரூபாய் சாப்பாடு தாத்தா' மறைவு

1 mins read
a5e6e59d-9240-4764-bcc7-ec0184cebe9e
-

ஏழை எளிய மக்களுக்கு 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி அவர்களின் பசியைப் போக்கிய, மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமு தாத்தா (படம்) தமது 91வது வயதில் காலமானார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வில்லூரைச் சேர்ந்த இவர் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சுமார் ஐம்ப து ஆண்டுகளாக சிறிய ஹோட்டல் நடத் தி வந்தார் . துவக்கத்தில் காலணாவுக்கும் பிறகு ரூ.1 முதல் ரூ.5 வரையிலும் சாப்பா டு வழங்கினார். சில ஆண்டுகளாக ரூ.10க்கு தரமான மதிய சாப்பாடு வழங் கி மக்கள் மனதில் இடம் பிடித்தார் .

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உட்பட ஏழைகளின் பசியைப் போக்கினார். சில மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட் டு சிகிச்சை பெ ற்று வந்த அவர் நேற்று மறைந்தார் .