சிறுமிக்குத் தாலி கட்ட வைத்த பெற்றோரிடம் விசாரணை

சிறுமிக்குத் தாலி கட்ட வைத்த பெற்றோரிடம் விசாரணை

1 mins read
ea4e5583-fc3b-461f-abb8-ae619dd8e4b4
டாக் பாயிலிருந்து மலேசியாவுக்குள் அதனைக் கடத்திச் செல்லும் நபரிடம் இந்த போதைப்பொருளை அவ்விருவரும் ஒப்படைக்க இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. -

வேலூர்: தூங்­கிக்­கொண்­டி­ருந்த 15 வயது சிறு­மி­யின் கழுத்­தில் வலுக்­கட்­டா­ய­மாக தாலி கட்ட வைத்த பெற்­றோ­ரி­டம் கட்­டா­யத் திரு­ம­ணம் குறித்து போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

வேலூ­ரில் உள்ள விருத்­தம்­பட்டு காவல்­நி­லை­யத்­துக்கு தனி­யாக வந்த சிறுமி, "எனக்கு திரு­ம­ணம் இப்­போ­தைக்கு வேண்­டாம் என்று எவ்­வ­ளவோ எடுத்­துக்­கூ­றி­யும் எனது பெற்­றோர் எதை­யுமே காதில் வாங்­கிக்­கொள்­ளா­மல் நான் தூங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது என் கையைப் பிடித்­துக்­கொண்டு என் கழுத்­தில் வலுக்­கட்­டா­ய­மாக தாலி கட்ட வைத்­த­னர்," என பெற்­றோர் மீது புகார் அளித்­தார்.

இப்புகா­ரைக் கேட்டு அதிர்ந்த போலி­சார், சமூக நலத் துறை அதி­கா­ரி­களை அழைத்து சிறு­மியை காப்­ப­கத்­தில் சேர்த்­த­னர்.