‘கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்து விட்டேன்’

சென்னை: “கொரோ­னா­வில் இருந்து குண­ம­டைந்துவிட்­டேன். தற்­போது ஓய்­வில் உள்­ளேன், விரை­வில் குண­ம­டைந்து வீடு திரும்­பு­வேன்,” என்று உயர் கல்­வித்­துறை அமைச்­சர் கே.பி. அன்­ப­ழ­கன் தெரி­வித்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

அத்­து­டன் எனது உடல்­நிலை மோச­ம­டைந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­வதை நம்­ப­வேண்­டாம் என­ அவர் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது. சென்னை மியாட் மருத்­துவமனை­யில் சிகிச்சை பெற்று வரும் அன்­ப­ழ­கன் தனி அறை­யில் அனுமதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் விரைந்து குண­ம­டைந்து வரு­வ­தாகவும் அவ­ரது உடல்­நிலை சீராக இருப்­ப­தா­க­வும் மருத்­து­வ­மனை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.