நோயாளிகளுக்கு இதயத் துடிப்பறியும் கருவியை பயன்படுத்த முதல்வர் உத்தரவு

1 mins read
7c12cb1d-095a-46b0-b5b7-f545290feb2d
-

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு இதயத் துடிப்பறியும் கரு­வியை அதிக அள­வில் பயன்படுத்­தும்­படி தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி உத்­த­ர­விட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

முதல்­வ­ரின் இது­போன்ற மக்­கள் நலன் காக்­கும் பணி­கள் கொரோனா தொற்றின் மூலம் ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­களை பெரு­ம­ள­வில் குறைக்க உத­வும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விஜயபாஸ்கர் வெளி­யிட்­டுள்ள அறிக்கையில், "கொரோனா நோய்த்­தொற்று ஏற்­பட்­டுள்ள நோயா­ளி­க­ளின் ரத்­தத்­தி­லுள்ள ஆக்­சி­ஜன் அள­வைத் தொடர்ந்து கண்­கா­ணிக்க வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது.

"ஏனெ­னில் அவர்­க­ளின் ரத்­தத்­தி­லுள்ள ஆக்­சி­ஜன் குறை­யும்போது மூச்­சுத் திண­றல் ஏற்­பட்டு நோயா­ளி­கள் உயி­ரி­ழக்­கும் வாய்ப்­புள்­ளது.

"இதனைத் தவிர்க்­கும் வகையில் நோயா­ளி­க­ளின் ரத்­தத்­தி­லுள்ள ஆக்­சி­ஜன் அளவைக் கணக்­கிட ஃபிங்கர் பல்ஸ் ஆக்­ஸி­மீட்­டர் (Finger Pulse Oximeter) என்ற கருவி பயன்­படுத்­தப்­ப­டு­கிறது.

"கொரோனா நோய்த்­தொற்­றி­னால் பாதிக்­கப்­பட்டவர்களின் ரத்­தத்­தி­லுள்ள ஆக்­சி­ஜன் அளவை வெகு எளி­தாக அள­விட ஏது­வாக இக்­க­ரு­வியை அதிக அள­வில் பயன்­பாட்­டுக்­குக் கொண்­டு­வரும்படி தமிழக முதல்வர் உத்­த­ர­விட்­ட­தைத் தொடர்ந்து, 43,000 பல்ஸ் ஆக்ஸி மீட்­டர் கரு­வி­க­ளைக் தொள்­மு­தல் செய்ய ஆணை வெளி­யி­டப்­பட்டு, இது­வரை 23,000 கரு­வி­கள் தரு­விக்­கப்­பட்­டுள்­ளன.

"மீத­முள்ள கரு­வி­கள் ஓரிரு நாட்­களில் பெறப்­படும். தேவை­யின் அடிப்­ப­டை­யில் இக்­க­ரு­வி­கள் கூடு­த­லாக கொள்­மு­தல் செய்­யப்­படும்," என்று கூறியுள்ளார்.