தேனி: ஜார்க்கண்ட்டில் விபத்து ஒன்றில் பலியான தேனி ராணுவ வீரர் 43 வயது அழகுராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், குச்சனூர் துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா.
ஒடிசா மாநிலத்தின் புவனேஷ் வரில் உள்ள ராணுவப் பிரிவு ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
அங்கிருந்து காஷ்மீர் லடாக் எல்லைப் பகுதிக்கு ராணுவத் தளவாட வாகனத்தை ஓட்டிச் சென்றார். ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்ட மலைப்பாதை யில் வாகனம் சென்றபோது விபத்துக்குள்ளானதில் அழகு ராஜா பலியானார்.
அவரது உடல் நேற்று முன்தினம் விமானத்தில் கோவை கொண்டு வரப்பட்டது. அங்கி ருந்து ராணுவ வாகனத்தில் நேற்று குச்சனுார் வந்து சேர்ந்தது.
அரசு சார்பில் உத்தம பாளையம் தாசில்தார் உதய ராணி அஞ்சலி செலுத்தினார்.
குச்சனூரைச் சுற்றியுள்ள கிராம மக்களும் முன்னாள் ராணுவத்தின ரும் வீரரின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் இருந்த பெட்டியில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி மனைவி ராணியிடம் ஒப்படைக்கப் பட்டது. மகள் வர்ஷனா 14, மகன் தேஜஸ் 9, ஆகியோரும் உடனி ருந்தனர். இந்தச் சமயத்தில் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் அழகுராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் விபத்தில் பலியானது துரைசாமி புரத்தைச் சேர்ந்த மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தேனி ராணுவ வீரர் அழகுராஜாவின் (மேல்) உடலை அரசு மரியாதை யுடன் தகனம் செய்தனர். அவரது உடல் இருந்த பெட்டி மீது போர்த்தப்பட்ட தேசி யக்கொடி அவரது மனைவியிடம் கொடுக்கப்படுகிறது.
படம்: ஊடகம்

