போலி வங்கி கிளை: மூவர் கைது

பண்­ருட்டி: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்­பிஐ) பெய­ரில் போலி வங்­கிக் கிளை நடத்­தி­ய­தாக மூன்று பேரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

கட­லூர் மாவட்­டம் பண்­ருட்­டி­யில் உள்ள எல்.என்.புரம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் சையது கலீல் மற்­றும் லட்­சுமி. முன்­னாள் வங்கி ஊழி­யர்­க­ளான அவர்­க­ளுக்கு கமால் பாபு, 19, என்ற மகன் உள்­ளார். கலீல் கடந்த 10 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

ஈராண்­டு­க­ளுக்கு முன்­னர் வங்கி பணி­யில் இருந்து லட்­சுமி ஓய்வு பெற்­றார். வேலை­யில்­லா­மல் இருந்த கமால் பாபு, ‘பாரத ஸ்டேட் வங்கி - நார்த் பஜார்’ என்ற பெய­ரில் போலி வங்­கிக் கிளை­யைத் தொடங்கி அதனை தமது வீட்­டி­லேயே நடத்தி வந்­துள்­ளார்.

அந்த வங்­கிக்கு தானே மேலா­ளர் என­வும் கூறி­வந்­துள்­ளார். இருப்பினும் வங்கி என அறிவிக்கக்கூடிய பெயர்ப் பலகை எதையும் அவர் வைக்கவில்லை. ஏற்­கெ­னவே, அப்­ப­கு­தி­யில் பாரத ஸ்டேட் வங்­கி­யின் இரண்டு கிளை­கள் இருந்­ததை அடுத்து மூன்­றா­வ­தாக கிளை திறக்­கப்­பட்­டுள்­ளதா என வாடிக்­கை­யா­ளர் ஒரு­வர் அந்த வங்­கி­யின் கிளை மேலா­ளர் வெங்­க­டே­ச­னி­டம் வின­வி­யுள்­ளார். அதனை அடுத்து, காவல்­து­றை­யி­ன­ருக்கு இது­கு­றித்து தக­வல் தெரி­வித்த கிளை மேலா­ளர் வெங்­க­டே­சன், கமால் பாபு நடத்­திய வங்­கிக் கிளைக்­குச் சென்­றுள்­ளார்.

அப்­போது, பாரத ஸ்டேட் வங்­கி­யின் பெய­ரி­லேயே போலி­யாக சலான், காசோலை, முத்­தி­ரை­கள், ஆவ­ணங்­கள் உள்­ளிட்­டவை அங்கு இருந்­த­தைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தார் அவர். மேலும், ‘பாரத ஸ்டேட் வங்கி-நார்த் பஜார்’ என்ற பெய­ரில் போலி இணை­யத்­த­ளம் உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­ப­தும் அவ­ருக்­குத் தெரி­ய­வந்­துள்­ளது. அதனை அடுத்து, கமால் பாபு, அவ­ருக்கு உத­விய ‘ஈஸ்­வரி ரப்­பர் ஸ்டாம்ப்’ நிறு­வன உரி­மை­யா­ளர் மாணிக்­கம், 52, அருணா பிரிண்­டர்ஸ் உரி­மை­யா­ளர் குமார், 42, ஆகி­யோரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

இவர்­கள் மீது மோசடி, கள்ள முத்­திரை உரு­வாக்­கு­தல், நற்­பெ­ய­ருக்கு தீங்கு விளை­வித்­தல் ஆகிய பிரி­வு­க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பண்­ருட்டி காவ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அவர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில், சுமார் 3 மாத காலம் அந்த வங்­கிக் கிளையை செயல்­ப­டுத்­தி­ய­தாக தெரி­ய­வந்­துள்­ளது. மேலும் தமது பெற்­றோ­ரைப் போலவே வங்­கி­யில் வேலை செய்ய வேண்­டும் என்ற தமது நீண்ட நாள் கனவு நிறை­வே­றா­த­தால் சொந்­த­மாக வங்­கிக் கிளை தொடங்­கி­ய­தாக போலிஸ் விசா­ர­ணை­யில் கமால் பாபு தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!