'10 ரூபாய் சாப்பாடு தாத்தா' மறைவு

'10 ரூபாய் சாப்பாடு தாத்தா' மறைவு

1 mins read
e846c15c-67cb-4e12-bd2a-599b5cdaba20
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ஏழை எளிய மக்களுக்கு 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி அவர்களின் பசியைப் போக்கிய, மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமு தாத்தா. படம்: ஊடகம் -

மதுரை: ஏழை எளிய மக்களுக்கு 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி அவர்களின் பசியைப் போக்கிய, மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமு தாத்தா (படம்) தமது 91வது வயதில் காலமா னார். மதுரை மாவட்டம் திருமங்கலம் வில்லூரைச் சேர்ந்த இவர் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சுமார் ஐம்பது ஆண்டுகளாக சிறிய ஹோட்டல் நடத்தி வந்தார். துவக்கத்தில் காலணாவுக்கும் பிறகு ரூ.1 முதல் ரூ.5 வரையிலும் சாப்பாடு வழங்கினார். சில ஆண்டுகளாக ரூ.10க்கு தரமான மதிய சாப்பாடு வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உட்பட ஏழை களின் பசியைப் போக்கினார். சில மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மறைந்தார்.