போலிசாருக்கு பாதிப்பு: கல்யாண மண்டபம் காவல் நிலையமானது

துடி­ய­லூர்: ஐந்து போலிஸ்­கா­ரர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து அவர்­கள் வேலை செய்­யும் போலிஸ் நிலை­யம் மூடப்­பட்­டது.

கோவை மாவட்­டக் காவல்­து­றைக்கு உட்­பட்ட துடி­ய­லூர் காவல் நிலை­யத்­தில் ஆய்­வா­ளர், உதவி ஆய்­வா­ளர்­கள், சிறப்பு உதவி ஆய்­வா­ளர்­கள், காவ­லர்­கள் என 45க்கும் மேற்­பட்­டோர் பணி­யாற்­று­கின்­ற­னர்.

துடி­ய­லூர் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தின் சார்­பில், ஆய்­வா­ளர், உதவி ஆய்­வா­ளர்­கள் உட்­பட 35 போலி­சா­ருக்கு கடந்த வாரம் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன் முடி­வு­கள் நேற்று (ஜூலை 12) வெளி­யா­யின.

44 வய­தான ஒரு ஆண் தலை­மைக் காவ­லர், 30 வய­துக்­குட்­பட்ட ஒரு பெண் காவ­லர், 3 ஆண் காவ­லர்­கள் என ஐந்து பேருக்­குக் கொரோனா தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. இதைத் தொடர்ந்து தொற்று உறுதி செய்­யப்­பட்ட ஐந்து காவ­லர்­க­ளை­யும் மீட்டு சிகிச்­சைக்­காக கோவை இஎஸ்ஐ மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்­த­னர்.

மேலும், காவ­லர்­க­ளுக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து, துடி­ய­லூர் காவல் நிலை­யம் தற்­கா­லி­க­மாக நேற்­றுக் காலை மூடப்­பட்­டது. இதற்­குப் பதி­லாக, அரு­கில் உள்ள தனி­யார் திரு­மண மண்­ட­பத்­துக்கு துடி­ய­லூர் காவல் நிலை­யம் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டது. அடுத்த சில நாட்­க­ளுக்கு துடி­ய­லூர் காவல் நிலை­யம், மேற்­கண்ட திரு­மண மண்­ட­பத்­தில் தற்­கா­லி­க­மா­கச் செயல்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுகாதாரத்துறையினர் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதியைத் தனிமைப்படுத்தி, அந்த இடங்கள் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தனர்.