தமிழகத்தில் முதல்முறையாக தானியங்கி வெப்ப சோதனை

தமிழகத்தில் முதல்முறையாக தானியங்கி வெப்ப சோதனை

1 mins read
ccb0741f-2e76-46c8-bdf0-390f24ba6e9f
படம்: ஊடகம் -

கட­லூர்: கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­யாகத் தமி­ழ­கத்­தில் முதல்­மு­றை­யாக கட­லூர் போலிஸ் அலு­வ­ல­கத்­தில் தானி­யங்கி உடல்வெப்ப பரி­சோ­தனை செய்­யும் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ளது. இந்தக் கருவியின் முன் நின்­றால் உடல் வெப்­ப­நிலைையக் காட்­டும் வகை­யில் வடி­வ­மைக்­கப்பட்­டுள்­ளது. இதன் செயல்­பாட்டை எஸ்பி ஸ்ரீஅ­பி­நவ் துவக்கி வைத்­தார். இதில், 37.2 டிகிரி செல்­சி­யஸ் டிகி­ரிக்கு மேல் உடல் வெப்­பம் இருந்­தால் எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பும். மேலும் அவர்­களைப் படம் எடுத்து கட்­டுப்­பாட்டு அறைக்கு அனுப்­பி­விடும். அவர்­கள் மருத்­து­வப் பரி­சோதனைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர். இந்­தக் கரு­வியை கட­லூரில் பணிபுரி­யும் போலிஸ் தொழில்­நுட்­பப் பிரிவு இன்ஸ்­பெக்­டர் ரவிக்­கு­மார் உரு­வாக்கி உள்­ளார். படம்: ஊடகம்