சவூதியில் தவித்த 174 தமிழர்கள் மீட்பு

1 mins read
2d8719df-3bf9-421c-9cfb-0afc92383c71
திருச்சி விமான நிலையம். கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் அண்மைகாலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டு, நேற்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.