பரோட்டா ஆசையில் போட்ட போலிஸ் வேடம் கலைந்தது

பரோட்டா சாப்பிடும் ஆசையுடன் பல நாட்களாகப் போலிஸ் வேடம் போட் டு வந்தவர்,
இப்போது உண்மை யான போலிசின் கையில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டுள்ளார்.

சென்னை சாலிகிராமம், காமராஜர் சாலையில் உணவகம் நடத்தி வரும் விஜய் என்பவரின்
கடைக்குத் தினமும் இரவு நேரம் வந்துவிட்டால் போதும். மடிப்பு கலை யாத காக்கி உடையுடன்
போலிஸ்காரர் ஒருவர் வந்துவிடுவார்.

அதட்டல், மிரட்டல் தொனியுடன் வரும் அவர், கடைக்காரரை மிரட்டி பரோட்டா ,  தோசை , சப்பாத்தி என ‘பார்சல்’ வாங்கிச் செல்வதும் வழக்கம்.

மிடுக்கான தோற்றத்துடன் காணப்படும் அவர் போலிஸ் என்ற ஒரே வார்த்தையை ச் சொல்லி
தினமும் தன் பையை நிரப்பிக் கொண்டு செல்வார்.

அத்துடன் , பக்கத்தில் உள்ள பெட்டிக் கடைக்கும் சென்று இலவசமாக சிகரெட் , குளிர்பானங்களையும் வாங்கிச்செல்வார்.

இதேபோல், நேற்று கடைக்கு வந்த அவர், 10
பரோட்டா , 3 தோசை ‘பார்சல்’ கட்டும்படி கூறியுள்ளார்.

உணவு தயாராகி வர தாமதம் ஆனதால் கடைக்காரருக்கும் மிரட்டிய போலிஸ்காரருக்கும்
இடையே தகராறு வந்துள்ளது.

இந்த தகவல் விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு செல்லவே , நிஜ போலிசார் பறந்து வந்தனர்.

அப்போதுதான் இத்தனை நாட்களாக மிரட்டி பரோட்டா வாங்கிச் சென்றவ ர் போலியான
போலிஸ்காரர் என தெரியவந்தது.

சிவக்குமார் எனும் அவர் நிலத்தரகராக இருந்துள்ளார். ஊரடங்கால் வேலை இல்லாமல்
போகவே போலிஸ் வேட ம் போட முடிவெடுத்து இருக்கிறார்.

கைதான சிவக்குமாரிடம் போலிசாரின் விசாரணை தொடர்கிறது.