மாற்றுத்திறனாளி தம்பதிகளின் ரூ.25,000 செல்லாத பணம்; ஆட்சியர் உதவி

1 mins read
f70c94eb-be37-4b29-bb68-02377235a54e
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன். கோப்புப்படம்: ஊடகம் -

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.25,000 பணம் செல்லாத, மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் என்பதை தெரிந்து அதிர்ச்சியுற்றனர்.

பத்தி, சூடம் விற்று உழைப்பால் சம்பாதித்த பணம் இப்படி பயனற்று போய் விட்டதே என்று மனமுடைந்த தம்பதிகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன்.

அவர் தனது வருமானத் தில் இருந்து ரூ.25,000 பணத்தைக் கொடுத்து உதவி இருப்பது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், பொதியமூப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு. இவர், கண்பார்வை இல்லாதவர். இவரது மனைவி பழனியம்மாள், மாற்றுத் திறனாளி.

இவர்கள் இருவரும் சூடம், ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்துவந்தனர். தற்போது பொது முடக்கத் தால் இவர்களது தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றாடச் செலவு களுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் 2016ல் தங்களது மாடுகளை விற்று கிடைத்த பணத்தை வீட்டில் சேமித்து வைத்துள்ளனர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்றபோதுதான் பணம் அனைத்தும் செல்லாதது என அவர்களுக்கு தெரியவந்தது.