தமிழக அரசு: இனி வாரம் 6 நாள் வேலை

1 mins read
19f9afbb-b924-4a94-ba2d-574c97b2dcf8
பட்­டப்­ப­டிப்பை மட்டுமின்றி 10, 12ஆம் வகுப்­பு­க­ளி­லும் தமிழ் வழி­யில் படித்­தி­ருந்­தால் அர­சுப்­ப­ணி­யில் முன்­னு­ரிமை வழங்க வழி­வகை செய்­யும் சீர்திருத்த மசோதா சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.  படம்: ஊடகம் -

சென்னை: அலுவலக ஊழியர்கள் சனிக்கிழமை உள்பட வாரத்தில் ஆறு நாட்கள் பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று பரவலை முறியடிக்கும் விதமாக ஊரடங்கு விதிக்கப் பட்டதால் தேங்கியுள்ள அரசுப் பணிகளை முடிக்க இனி வாரத்தில் 6 நாட்கள் வேலைநாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

தமிழக முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரக வளர்ச்சி, நகரப் பஞ்சாயத்து துறைகளின் கீழ் வரும் அலுவலகங்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

"இப்போது முதல் காலை 10.30 மணிக்குள் அரசு ஊழியர்கள் அலுவலகம் வந்துவிட வேண்டும்.

"இன்னும் பணிகள் முடிக்கப்படா மல் நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கவேண்டும். ஊழியர்கள் சரியாகப் பணிக்கு வருவதை அறிக்கையாக தயாரித்து தினமும் பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும். இம்முறையை அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலகங்களும் பின்பற்றும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து அலுவலகங்கள் வழக்கமாக வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கி வந்தன.

முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து அரசுப் பணிகள் தொடர்ந்து முடக்கம் கண்டு வருகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு ஊரக வளர்ச்சித் துறை, நகர பஞ்சாயத்து துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களுக்கு இந்த சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.