மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கும்படி விவசாயிகள் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை விவசாயிகள் குந்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கவேண்டும், காவிரி-அய்யாறு- உப்பாறு திட்டத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கி, அதனை நிறைவேற்ற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். படம்: ஊடகம்