சென்னையில் ஐந்து மாதகாலம் கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும்

சென்னையில் ஐந்து மாதகாலம் கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும்

1 mins read
76a263e4-a1b9-4563-a6a6-2590b5d7c738
சென்­னையில் நேற்று மட்­டும் 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சென்­னை­யில் மொத்த பாதிப்பு எண்­ணிக்கை 41,172ஆக அதிகரித்­துள்­ளது. கோப்புப்படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: சென்னையில் அடுத்த ஐந்து மாத காலம் வரை கொரோனா தடுப்புப் பணிகள் விடாது தொடரும் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய ஊரடங்குதான் முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.

"சென்னையின் 200 வாா்டுகளிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நாள்தோறும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை சுமாா் 10 லட்சம் பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 7.16 லட்சம் மக்களில் இதுவரை 2.31 லட்சம் போ் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனா்.

"சென்னையில் உள்ள 89 சந்தைகளும் அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 5 மாதங்களுக்கு கிருமி தடுப்புப் பணிகள் தொடரும்.

"முகக்கவசம், கையுறை இல்லாமல் வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடிக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.