தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்பு ஏறுமுகம்

தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்பு ஏறுமுகம்

1 mins read
b3d3944c-30ba-4ef4-8a21-9edee5348f91
தமிழகத்தில் இருந்து கர்நாடாகவுக்குத் திரும்புபவர்களுக்கு கொவிட்-19 தொற்று உள்ளதா என்ற மருத்துவச் சோதனையை மேற்கொள்கிறது கர்நாடக மாநிலம். படம்: ஏஎப்பி-மஞ்சுநாத் -

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1.38 லட்சமாகவும் சென்னையில் 77,338 ஆகவும் இந்தப் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 1,966 பேரும் இதில் சென்னையில் மட்டும் 1,253 பேரும் இந்த கிருமித்தொற்றால் பலியாகியுள்ளனர். இதேபோல புதிதாக 3,617 பேர் குணமடைந்துள்ளதால் இவர்களை யும் சேர்த்து 90,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை யில், "மாநிலத்தில் இதுவரை 16.09 லட்சம் கொேரானா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 1,38,470 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண் காணிப்பில் இருந்து வருகின்றனர்.

"ஞாயிற்றுக்கிழமை காலைவரை ஒரே நாளில் 4,244 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர் களில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,168 போ் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

"அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 385 பேருக்கும் மதுரையில் 319 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"இத்தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை 65% மக்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.