புதிய குடியிருப்புப் பகுதியின் பெயர் 'எடப்பாடியார் நகர்'

புதிய குடியிருப்புப் பகுதியின் பெயர் 'எடப்பாடியார் நகர்'

1 mins read
b27e6887-0f4b-459a-adc3-66f000826b0c
குடிதண்ணீர் பிரச்சனையும் விவசாயிகளின் பிரச்னைகளையும் தீர்க்கும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியதால் பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் எடப்பாடியார் நகர் உருவாக்கப்பட்டதாக சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் குறிப்பிட்டார். படம்: தமிழக ஊடகம் -

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாக ஈரோடு மாவட்டம் தோப்புப்பாளையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நகரின் திறப்பு விழாவில் பங்கேற்ற பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் எடப்பாடியார் நகரின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

இப்பகுதி மக்களின் குடிதண்ணீர் பிரச்சனையும் விவசாயிகளின் பிரச்னைகளையும் தீர்க்கும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியதால் பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் எடப்பாடியார் நகர் உருவாக்கப்பட்டதாகவும் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்