12 மாவட்டங்களில் சதமடித்த கிருமித்தொற்று

12 மாவட்டங்களில் சதமடித்த கிருமித்தொற்று

1 mins read
f4faa3d1-fc93-4846-80d7-88f5131c04f5
கொவிட்-19 கட்டுப்பாட்டால் பள்ளிக்குச் செல்லமுடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிள்ளைகள் தொலைக்காட்சி வழி பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் நாடு அரசு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை ஒளிபரப்பி வருகிறது. படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிருமிப் பர­வல் வேகம் தற்­போது கவ­லை­ய­ளிக்­கும் வித­மாக உள்­ளது. தின­மும் சரா­ச­ரி­யாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு வரு­கிறது. முத­லில் தலை­ந­கர் சென்னை மற்­றும் அதைச் சுற்­றி­யுள்ள சில மாவட்­டங்­களில் மட்­டும் பாதிப்பு எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது.

ஆனால் சென்­னை­யில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தீவிர பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளால் தற்­போது அங்கு எண்­ணிக்­கை குறைய ஆரம்­பித்­துள்­ளது. ஆனால் மற்ற மாவட்­டங்­க­ளான மதுரை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர் மற்­றும் செங்­கல்­பட்­டில் எண்­ணிக்கை அதி­க­மா­கிக் கொண்டே செல்­கிறது. திங்கட்கிழமை மட்­டும் சென்னை, மதுரை, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு, விழுப்­பு­ரம், வேலூர், நெல்லை, தூத்­துக்­குடி, தேனி, சேலம், ராணி­பேட்டை, கன்­னி­யா­கு­மரி ஆகிய 12 மாவட்­டங்­களில் எண்­ணிக்கை தலா 100ஐ தாண்­டி­யது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.