சாத்தான்குளம் காவல்நிலைய கொலை: சிபிஐ விசாரணைக் காவலில் ஐந்து அதிகாரிகள்

மதுரை: பதை­ப­தைப்பை ஏற்­ப­டுத்­திய சாத்­தான்­கு­ளம் தந்தை-மகன் கொலை வழக்­கில் சிபிஐ விசா­ரணை தீவி­ரம் அடைந்­துள்­ளது.

இந்த வழக்­கில் காவல் ஆய்­வா­ளர் ஸ்ரீதர், உதவி ஆய்­வா­ளர்­கள் ரகு கணேஷ், பால­கி­ருஷ்­ணன், காவல் சிறப்பு உதவி ஆய்­வா­ளர் பால்­துரை உள்­பட 10 காவ­லர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இவர்களில் முத­லில் கைதான ஆய்­வா­ளர் ஸ்ரீதர், உதவி ஆய்­வா­ளர்­கள் ரகு கணேஷ், பால­கி­ருஷ்­ணன், காவ­லர்­கள் முரு­கன், முத்து­ ராஜ் ஆகிய ஐவ­ரை­யும் காவ­லில் எடுத்து விசா­ரிக்க மதுரை மாவட்ட நீதி­மன்­றத்­தில் சிபிஐ மனு தாக்­கல் செய்­தது.

அந்த மனு மீது மதுரை மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேற்று விசா­ரணை நடை­பெற்­றது.

காவ­லில் வைத்து விசா­ரிக்க ஐந்து நாட்­க­ளுக்கு அனு­மதி கோரிய நிலை­யில், 3 நாட்­க­ளுக்கு சிபிஐ நீதி­மன்­றம் அனு­மதி அளித்­தது. இதை­ய­டுத்து, மருத்­துவ பரி­சோ­த­னைக்­குப் பிறகு ஐவ­ரும் சிபிஐ அலு­வ­ல­கத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். தொடர்ந்து, அவர்­கள் அனை­வ­ரி­ட­மும் மது­ரை­யில் உள்ள தனது அலு­வ­ல­கத்­தில் சிபிஐ விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யுள்­ளது.

மூன்று நாள் காவல் முடிந்து ஜூலை 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்­டும் ஒப்­ப­டைக்க உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல காவ­லில் இருக்­கும்போது ரகு கணேஷும் ஸ்ரீதரும் தின­மும் 1 மணி நேரம் தங்­க­ளது வழக்­க­றி­ஞரைச் சந்­திக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

முன்னதாக, ஐவருடன் போலிசார் சென்ற வாகனம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேர்ந்ததன் மர்மம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரி வித்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!