மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 7,000ஐ கடந்தது

மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 7,000ஐ கடந்தது

1 mins read
c15c2099-5d7f-4261-b8e7-9d41ca240a1e
மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,285 ஆகி உள்ளது. படம்: இந்திய ஊடகம் -

மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,285 ஆகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 2,667 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்