சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், "ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தொடர்பான உயர் நீதிமன்ற கருத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். நினைவு இல்லமாக மாற்ற எந்த அவசர மும் காட்டவில்லை. போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான அசையும் சொத்துகளை கையகப்படுத்தவே அவசரச் சட்டம் பிறப்பித்தோம். நிலம் கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை,' என்றார். இதையடுத்து, தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதா நினைவு இல்ல எதிர்ப்பு மனு தள்ளுபடி
1 mins read
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. படம்: ஊடகம் -

