ஓடையில் கவிழ்ந்தது கார்; அறுவர் மரணம்

ஓடையில் கவிழ்ந்தது கார்; அறுவர் மரணம்

1 mins read
97f69730-957e-486e-a3b2-be6ce7868df7
சாலையோரம் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டாட்டா சுமோ கார் பாரந்தூக்கி மூலம் மீட்கப்பட்டது. படம்: ஊடகம் -

திண்டிவனம்: சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். ஓட்டுநருக்கு தூக்கம் கண்ணை இழுத்துச் செல்ல, அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், தறி கெட்டு ஓடி சாலையோரம் உள்ள ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஊடகத் தகவல்கள் ெதரிவித்துள்ளன. காரின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சாலையில் சென்ற இருவர் படுகாயத்துடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஒருவர், தனது குடும்பத்துடன் 'இ-பாஸ்' அனுமதிச் சான்றிதழுடன் டாட்டா சுமோ காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டி வனத்தை அடுத்த பாதிரி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பயங்கர சத்தத்துடன் ேமாதி கவிழ்ந்ததில் காரில் இருந்த ஒருவர் கூட உயிருடன் பிழைக்க வில்லை. மீட்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து தொடர்பில் விழுப்புரம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.