அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே சிறுமியை வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கின் தொடர் பில் கைதான ராஜா(படம்), போலிசாரிடம் இருந்து நேற்று காலை தப்பி ஓடினார். அவரைப் பிடிக்க ஆறு தனிப்படை போலிஸ் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்த ராஜாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்வதற்காகப் போலிசார் அவனை புதுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பரிசோதனையின் போதே, கைவிலங்கை உருவிக்கொண்டு ராஜா போலிசாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து அவ ரைப் பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. தலைமையில் ஆறு தனிப்படை போலிசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மருத்துவமனைக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதி, அதன் அருகே உள்ள புதுராசாப்பட்டி, தென்னந்திறையன்பட்டி ஆகிய கிராமங்களிலும் போலிசாருடன் இணைந்து ஊர் பொதுமக்களும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை ராஜா என்ற பூக்கடைக்காரர் கோயிலில் பொங்கல் வாங்கிக்கொடுப்பதாகப் பொய் கூறி, அழைத்துச் சென்று வன்கொடுமை செய்து, கொலை செய்து ஓடைப் புதரில் வீசிவிட்டுச் சென்றார்.

