கொரோனா தொற்று அச்சத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆடித் தள்ளுபடி அறிவிப்புகள்; கடைகளில் கூட்டம்

கொரோனா தொற்று அச்சத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆடித் தள்ளுபடி அறிவிப்புகள்; கடைகளில் கூட்டம்

1 mins read
5a3902c8-4539-42c9-b2b8-e501f836f5c7
சென்னையில் தியாகராய நகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்பட இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. படம்: ஊடகம் -

கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தளர்வுகளின் எதிரொலியாக பெரும்பாலான கடைகள் தமிழகத்தில் திறந்திருக்கின்றன.

நேற்று ஆடி மாதம் தொடங்கியதையொட்டி, தள்ளுபடி விற்பனை பற்றிய செய்திகளும் வெளியாகின.

சென்னையில் தியாகராய நகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

நகைக்கடை, மின்னியல் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஆடித்தள்ளுபடி விற்பனையில் இறங்கியுள்ளன.

கொரோனா பரவும் அச்சத்தைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் கூட்டம் ஓரளவுக்கு கடைகளில் காணப்பட்டது. வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்