தெற்கு மாவட்டங்களில் கிருமிப்பரவல் அதிகரிப்பு

2 mins read
061241e1-45b3-4ee2-bb1a-6589a1bb984c
இணையம் வழி கற்றலுக்குத் தேவையான புத்தகங்கள் கருவிகளைப் பெறுவதற்காக பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்துக் காத்திருக்கும் சென்னை மாணவிகள். படம்: ஏஎப்பி, அருண் சங்கர் -

மதுரை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், சென்னையில் இதன் வேகம் ஒரு கட்டுக்குள் வந்துள்ளது. அதேசமயம், தெற்கு மாவட் டங்களில் தொடர்ந்து தனது பிடியை இறுக்கி வருகிறது கொரோனா கிருமித்தொற்று.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்ட மக் களை நாளும் பாதிப்பு, குணம், உயிரிழப்பு என அதிர்ச்சியில் ஆழ்த்திய கொரோனாவின் கோரப் பிடி, இப்போது தெற்கு மாவட்டங்கள் பக்கம் திரும்பி உள்ளது.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருது நகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 தெற்கு மாவட்டங்களிலும் கிருமிப் பரவலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இதுவரை இந்த 10 மாவட்டங் களிலும் 24,865 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இவர்களில் 12,186 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 12,368 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்றின் பாதிப்பால் 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு மாவட்டங்களில் மதுரை யில் மட்டும் அதிகபட்சமாக இது வரை 7,597 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4,234 பேர் குண மடைந்துள்ள நிலையில், 2,929 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக மீண்டு வருகிறார்கள். ஒரே நாளில் 5,000 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர்.

அதேநேரத்தில் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக 4,000க்கும் மேலானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நேற்று வரை 82,128ஆக அதிகரித்திருந்தது.

இதுவரை 65,748 பேர் குண மடைந்துள்ளனர். 15,038 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கொரோனா காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,341ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, "தமிழ கத்தில் இதுவரை இல்லாத அளவாக 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து 156,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 107,416 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 2,236 ஆக அதிகரித்துள்ளது.

"மாவட்ட வாரியாக பார்க்கும் போது, சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று மிக வேகமாக அதிகரிக்கவில்லை. அந்த நிலையே இன்றும் நீடிக்கிறது. நேற்றுகாலை வரை சென்னையில் 1,157 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

"மதுரை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று 200க்கு அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. 10 தெற்கு மாவட்டங்களில் ஆறு மாவட்டத்தில் 100 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.