பெரியார் சிலை மீது காவி சாயம் வீசியவர் வாக்குமூலம்; ராகுல் தமிழில் கண்டனம்

பெரியார் சிலை மீது காவி சாயம் வீசியவர் வாக்குமூலம்; ராகுல் தமிழில் கண்டனம்

1 mins read
b60dfcea-3b56-4665-9e92-30351e550ca9
ராகுல் காந்தி. -

கோவை: கோவை­யில் பெரி­யார் சிலை அவ­ம­திக்­கப்­பட்­ட­தற்கு காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி, தனது டுவிட்­டர் பக்­கத்­தில் தமி­ழில் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

"எவ்­வ­ளவு தீவி­ர­மான வெறுப்­பும் ஒரு மகத்­தான தலை­வனைக் களங்­கப்­ப­டுத்த முடி­யாது," என்று அவர் பதி­விட்­டுள்­ளார்.

இதற்கிடையே, கோவை­யில் பெரி­யார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவ­ம­திப்பு செய்­த­வர்­களை உட­ன­டி­யாக கைது செய்­யக் கோரி பெரி­யார் அமைப்­பி­ன­ரும் திமு­க­வி­ன­ரும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதேபோல் சிதம்­ப­ரத்­தி­லும் திரா­வி­டர் கழ­கம், திமுக, விடுத லைச் சிறுத்­தை­கள், மார்க்­சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்­ளிட்ட அனைத்­துக் கட்­சி­யி­ன­ரும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்நிலையில், 'கறுப்­பர் கூட்­டம் யூடியூப் சேனல்' கந்தசஷ்டி கவ­சத்தை அவ­ம­தித்­த­தால் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கவே கோவை சுந்­தராபுரத்­தில் உள்ள பெரி­யார் சிலை மீது காவி சாயத்தை வீசி­னேன் என்று காவல் நிலை­யத்­தில் சரணடைந்­துள்ள அருண்­கி­ருஷ்­ணன் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.

அருண்­கி­ருஷ்­ணனை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.