தமிழகத்தில் ஒரே நாளில் 88 பேர் மரணம்; 4,800 பேர் பாதிப்பு

1 mins read
7a0fa102-735c-43ef-8bca-2755ce73da88
இந்­திய அள­வில் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கும் தமி­ழ­கத்­தில் ஒரே நாளில் 88 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். ஒரே நாளில் ஆக அதி­க­மா­னோர் கிரு­மித்­தொற்­றால் மாண்­டி­ருப்­பது இதுவே முதல்­முறை என்று மாநில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது. படம்: ஏஎப்பி/ அருண்சங்கர் -

கொரோனா கிரு­மிப் பாதிப்­பில் இந்­திய அள­வில் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கும் தமி­ழ­கத்­தில் ஒரே நாளில் 88 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

ஒரே நாளில் ஆக அதி­க­மா­னோர் கிரு­மித்­தொற்­றால் மாண்­டி­ருப்­பது இதுவே முதல்­முறை என்று மாநில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

மாண்­டோ­ரில் 64 பேர் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் 24 பேர் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் சிகிச்சை பெற்று வந்­த­வர்­கள். மேலும் உயி­ரி­ழந்­த­வர்­களில் 31 பேர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள்.

ஒரே நாளில் 4,807 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ள­தும் முதல் சம்­ப­வம் என்­றது அதன் அறிக்கை. ஆக அதிகமாக சென்னையில் 1,219 பேருக்கு தொற்று உறுதியானது.

புதி­தாக கிருமி தொற்­றி­ய­வர் ­க­ளை­யும் சேர்த்து தமி­ழகத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 165,714 ஆக­வும் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 2,403 ஆக­வும் அதி­க­ரித்­து­விட்­டன.

பாதிப்­பு­க­ளின் எண்­ணிக்கை இவ்­வாறு இருந்­தா­லும் குண­ம­டைந்து வரு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

சனிக்­கி­ழமை மட்­டும் 3,049 பேர் கிரு­மித்­தொற்­றில் இருந்து மீண்­ட­னர். இவர்­க­ளை­யும் சேர்த்து குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 113,856க்கு உயர்ந்­தது.

தமி­ழ­கத்­தில் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் 673 பேர் வெளி

­நா­டு­களில் இருந்து சிறப்பு விமா­னங்­கள் மூலம் வந்­த­வர்­கள் என்று சுகா­தா­ரத் துறை குறிப்­பிட்­டுள்­ளது.