15 தமிழக எம்எல்ஏக்களுக்கு கிருமித்தொற்று

15 தமிழக எம்எல்ஏக்களுக்கு கிருமித்தொற்று

2 mins read
8aa8c206-c2f4-4c98-9b2a-d60f32683c21
சென்னை மக்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா கிருமி பரிசோதனை செய்துகொள்ள பல முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர். படம்: ஏஎஃப்பி -

சென்னை: இந்­திய அள­வில் கொரோனா கிரு­மிப் பர­வ­லில் இரண்­டாம் இடத்­தில் இருக்­கும் தமி­ழ­கத்­தில் மக்­க­ளு­டன் நெருங்­கிப் பழ­கும் அதி­கா­ரி­களும் அர­சி­யல்­வா­தி­களும் கிரு­மித்­தொற்­றால் அவ­திப்­ப­டு­வது அதி­க­ரித்து வரு­கிறது.

கொரோனா நோயா­ளி­களை மிகுந்த அக்­க­றை­யு­டன் கவ­னித்­துக்­கொண்ட விருத்­தா­ச­லம் வட்­டாட்­சி­யர் கவி­ய­ரசு அதே கொரோ­னா­வால் உயி­ரி­ழந்த சம்­ப­வம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அந்த அதிர்ச்சி நீடிக்­கும் வேளை­யில் திமு­க­வைச் சேர்ந்த மூன்று எம்­எல்­ஏக்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது.

கிருஷ்­ண­கிரி திமுக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் (எம்­எல்ஏ)செங்­குட்­டு­வ­னுக்கு கடந்த சில நாட்­க­ளாக லேசான சளி காய்ச்­சல், இரு­மல் இருந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் அவ­ருக்கு பரி­சோ­தனை செய்­யப்­பட்­ட­தில் கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இத­னைத் தொடர்ந்து செங்­குட்­டு­வன் ஓசூ­ரில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

அதே­போல கட­லூர் மாவட்­டம் திட்­டக்­குடி திமுக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கணே­ச­னுக்­கும் சனிக்­கி­ழமை கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், வேலூர் மாவட்ட திமுக எம்­எல்ஏ கார்த்­தி­கே­ய­னுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருப்­பது நேற்று உறுதி செய்­யப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்­து­வ­ம­னை­யில் அவர் உட­ன­டி­யாக அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அடுத்­த­டுத்து மூன்று எம்­எல்­ஏக்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தால் திமு­க­வி­னர் கவ­லை­ய­டைந்­த­னர்.

தமி­ழ­கத்­தில் ஏற்­கெ­னவே கிருமி தொற்­றிய எம்­எல்­ஏக்­க­ளின் எண்­ணிக்கை 14ஆக இருந்த நிலை­யில் நேற்று கார்த்­தி­கே­ய­னைச் சேர்த்து 15 ஆனது. அவர்களில் தமிழக அமைச்சர்களும் அடங்குவர்.

இருப்­பி­னும் செஞ்சி தொகுதி திமுக எம்­எல்ஏ மஸ்­தான் உள்­ளிட்ட சில எம்எம்ஏக்கள் தொற்­றிலிருந்து மீண்டு வீடு திரும்பி­யுள்ளனர்.

தமி­ழக நிலை­மையை

கேட்­ட­றிந்­தார் பிர­த­மர்

தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் வரை 1 லட்­சத்து 65 ஆயி­ரத்து 714 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் 2,403 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் கிரு­மிப் பர­வல் தடுப்­புப் பணி­கள் குறித்து பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­டம் தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­றிந்­தார்.

இந்­தி­யா­வி­லேயே அதி­க­பட்­ச­மாக தமிழ்­நாட்­டில் நாள் ஒன்­றுக்கு 48 ஆயி­ரம் கொரோனா கிருமி பரி­சோ­தனை செய்­யப்­பட்டு வரு­வ­தாக அப்­போது பிர­த­ம­ரி­டம் முதல்­வர் பழ­னி­சாமி தெரி­வித்­தார்.

மேலும் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க தமி­ழக அரசு முழு­வீச்­சில் நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் விரை­வில் இயல்­பு­நிலை திரும்ப அனைத்து முயற்­சி­க­ளை­யும் அரசு எடுத்து வரு­வ­தா­க­வும் பழ­னி­சாமி உறுதி கூறி­ய­தா­க­வும் தமிழக அரசின் அறிக்கை கூறி­யது.