பரோட்டா வாங்கினால் முகக்கவசம் இலவசம்

மதுரை: கொரோனா விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் மதுரை மாநகரில் ஆரப்­பா­ளை­யம் பகுதியில் 50 ஆண்­டு­கள் பழ­மை­யான ‘சுப்பு கடை’ உண­வக உரி­மை­யா­ளர் புதிய முயற்­சியைக் கையாண்டு வரு­கி­றார். இந்­தக் கடை­யில் ‘கிரில் சிக்­கன்’ மற்­றும் பிரி­யாணி வாங்­கு­ப­வர்­க­ளுக்கு கிரு­மி­நா­சினி மற்­றும் முக­க்க­வ­சங்­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்­றன.

மேலும், இரண்டு பரோட்டா வாங்­கி­னால் ஒரு முக­க்க­வ­சம் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கிறது. முக­க்க­வ­சங்­கள் மற்­றும் கிரு­மி

­நா­சி­னி­ திரவம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் நிலை­யில், உண­வு­க­ளின் விலை­யில் எவ்­வித மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை என கடை உரி­மை­யா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

இத­னைத்­ தொ­டர்ந்து, கடை வாச­லில் வாடிக்­கை­யா­ளர்­கள் மற்­றும் பொது­மக்­கள் அனை­வ­ருக்­கும் இல­வ­ச­மாக கபசு­ரக்குடி­நீ­ரும் வழங்­கப்­ப­டு­கிறது.

காட்­டுத்­தீ­யாய் பர­வும் கொரோ­னாவை கட்­டுப்­ப­டுத்­தும் சுப்பு கடை உரி­மை­யா­ளரின் முயற்சி வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் வர­வேற்­பை­யும் பாராட்­டை­யும் பெற்­றுள்­ள­தாக ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!