தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ரூ.10,399 கோடி முதலீடு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ரூ.10,399 கோடி முதலீடு

2 mins read
4ba9af93-2941-47bf-a3b6-09e7b7c9ce43
மேட்டூர் சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் இன்று நடைபெறுகிறது. ரூ.565 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறார். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள ஆறு மாவட்­டங்­களில் பல்­வேறு தொழில் நிறு­வ­னங்­கள் ரூ.10,399 கோடி முத­லீடு செய்ய உள்­ளன. இதன்மூலம் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கா­னோ­ருக்கு வேலை வாய்ப்பு கிடைக்­கும் என தமி­ழக அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, ராணிப்­பேட்டை, கோயம்­புத்­தூர், விழுப்­பு­ரம், ஈரோடு ஆகிய மாவட்­டங்­களில் எட்டு தொழில் நிறு­வ­னங்­கள் தங்­கள் புதிய முத­லீட்­டுத் திட்­டங்­க­ளைச் செயல்­படுத்த உள்ள­தா­க­வும், இதற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் நேற்று கையெ­ழுத்­தா­ன­தா­க­வும் அரசு செய்­திக்­கு­றிப்பு மேலும் தெரி­வித்துள்ளது.

தமி­ழ­கத்தை தொடர்ந்து வளர்ச்­சிப் பாதை­யில் இட்­டுச் செல்­லும் தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன் முதல்­வர் பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­வ­தாக குறிப்­பிட்­டுள்ள அரசு, மாநி­லத்­தில் நில­வும் சிறப்­பான தொழில் சூழ­லின் விளை­வாக தொடர்ந்து பல புதிய தொழில் முத­லீட்­டுத் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யி­லான மூன்று மாதங்­களில் தேசிய அள­வில் அதி­க­மான முத­லீ­டு­களை ஈர்த்­த­தன் மூலம், மகா­ராஷ்­டிரா மாநி­லத்தை தமி­ழ­கம் பின்­னுக்­குத் தள்ளி இருப்­ப­தா­க­வும், தற்­போது தமி­ழ­கம் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் முத­லி­டத்­திற்கு முன்­னேறி இருப்­ப­தா­க­வும் அரசு செய்­திக்­கு­றிப்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

காஞ்­சி­பு­ரத்­தில் விக்­ரம் சோலார் நிறு­வ­னம் ரூ.5,423 கோடி செல­வில் 7,542 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் வகை­யில் ஒரு தொழிற்­சாலையை நிறுவ உள்ளது. வாலா­ஜா­பாத்­தில் 250 கோடி ரூபாய் முத­லீட்­டில் சுமார் 1,500 நபர்­களுக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் வகை­யில் தொழிற்­பூங்கா திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது.

கோவை­யில் 200 கோடி ரூபாய் முத­லீட்­டில், சுமார் 400 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் திட்டத்­திற்­கான ஒப்­பந்­தம் நேற்று கையெ­ழுத்­தா­னது.

செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் சுமார் 4 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீட்­டில் சுமார் 2,500 வேலை வாய்ப்­பு­க­ளு­டன் ஹீரா நந்­தானி குழு­மம் தக­வல் தரவு மையம் ஒன்ற அமைக்க உள்­ளது.

இதே­போல், ராணிப்­பேட்­டை­யி­லும் விழுப்­பு­ரம் மாவட்­டம், மரக்­கா­ணத்­தி­லும் சில நிறு­வ­னங்­கள் கோடிக்­க­ணக்­கில் முத­லீடு செய்­கின்­றன என்று தமி­ழக அர­சின் செய்­திக்­கு­றிப்­பில் விரி­வாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் எட்டு புதிய திட்­டங்­க­ளின் மூலம் 10,399 கோடி ரூபாய் முத­லீ­டு­கள் குவி­வ­து­டன் சுமார் 13,507 பேருக்கு வேலை­வாய்ப்புகள் கிட்­டும்.

கடந்த 4 மாதங்களில் 25 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததால் தமிழகத்தில் ரூ.25,527 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.