சென்னை: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆயுர்வேத மருத்துவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றை முறியடிக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அம்மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
"ஆயுர்வேத மருத்துவர்கள் அரசுக்கு சரியான முறையில் முன்மொழிவுக்கடிதம் அனுப்பினால், உரிய விதிமுறைகளோடு பரிசோதனைக்கான அனு மதியை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
"தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள், உடல் முழுவதும் கவச உடையணிந்து கொரோனா வார்டுக்கு நேரடியாகச் சென்று நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்," என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கொரோனா நோயாளி களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசு மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார்.

