கோழி மேய்ந்ததன் தொடர்பில் அண்டை வீட்டாரிடையே மூண்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், அதன் தொடர்பில் ஒரு தம்பதிகைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் ஆரிக்கம்பேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார், தம் மகனின் விருப்பத்துக்காக, மூன்று கோழிகளை கடந்த வாரம் வீட்டுக்கு வாங்கி வந்தார்.
அண்டை வீடான அன்பழகனின் வீட்டுக்குள் அந்தக் கோழிகள் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து, அன்பழகனின் மனைவி அழகுமீனா அந்தக் கோழிகளைக் கல்லால் அடித்து விரட்டினாராம்.
அதனைப் பார்த்த சசிகுமாரின் மனைவி துர்காதேவி, அழகுமீனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மனைவிகளுக்கு ஆதரவாக சசிகுமாரும் அன்பழகனும் கோதாவில் குதித்தனர்.
தகராறு முற்றி கைகலப்பானதில், அன்பழகன் குடும்பத்தினர் சசிகுமாரைக் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
தலையில் காயமுற்ற அவர் அசைவின்றிக் கிடந்தார்; அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
சசிகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலிசார் அனுப்பி வைத்தனர். சசிகுமாரை கொலை செய்த வழக்கில் அன்பழகனை போலிசார் கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அன்பழகனின் மனைவி அழகுமீனாவை போலிசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


