சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க, இருளில் வாழும் கிராமம்

சிட்டுக்குருவிகள் கூடு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மின் இணைப்புப் பெட்டியில், இருந்த கூட்டைக் கலைக்காமல், இருள் சூழ்ந்த தெருக்களையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்து வருகிறது ஒரு கிராமம்.

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே பொத்தகுடி கிராமத்தில் தெருவிளக்குகளுக்கான மின் இணைப்பு பெட்டியில் ஒரு குருவி கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்து வந்தது.

இதையறிந்த கிராமத்து மக்கள் குருவிக்கூட்டைப் பாதுகாப்பதுடன் குஞ்சுகள் பொறிக்கும் முன் அவை அங்கிருந்து சென்றுவிடாமல் காக்கத் தொடங்கினர்.

கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருவிளக்குகளுக்கும் ஒரே இணைப்புப் பெட்டி என்பதால், சுவிட்சை போட முடியாமல் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருளில் வாழ்ந்து வருகிறார்கள் பொத்தகுடி கிராமத்தினர்.

சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும், நன்மை அதிகரித்து, அதிர்ஷ்டம் பிறக்கும் என்று கூறுகின்றனர் அக்கிராம மக்கள்.

சிட்டுக்குருவிகளைப் பார்ப்பதே அபூர்வமாகி வரும் இச்சூழலில் குருவியையும் குஞ்சுகளையும் காப்பாற்ற இந்த கிராமத்தினர் மேற்கொண்ட செயல் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!