புதுக்கோட்டை: கொவிட்-19 நோயாளிகளைப் பார்த்தாலே பலரும் ஓட்டமெடுக்கும் நிலையில் அந்நோயின் தாக்கத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிய தம்பதியர்க்கு புதுக்கோட்டையில் உள்ள கிராம மக்கள் தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.
அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து 55 வயதான அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையின்போது அவரது மனைவிக்கும் கிருமி தொற்றியது தெரியவந்தது. இதனால் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் சிகிச்சையில் குணமடைந்து ஊர் திரும்பினர். இதையறிந்த நாகுடி பகுதி மக்கள் பலர் ஒன்றாகத் திரண்டு இருவருக்கும் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்து மாலை அணிவித்தனர். இதனால் அத்தம்பதியர் நெகிழ்ந்து போயினர்.

