குடிநீரில் ‘பாண்டான்’ வாசனை; விசாரணை

சிங்கப்பூரில் உள்ள சில வீடுகளில் காய்ச்சிய குடிநீரில் ‘பாண்டான்’ வாசனை வந்ததால் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரத்தை ேதசிய நீர்வள முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரித்து வருகிறது.

தண்ணீரில் உள்ள கரிம சேர்மம் காரணமாக வழக்கத்திற்கு மாறான வாசனை வந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக கழகம் குறிப்பிட்டது.

“ஆனால் குடிநீர் பயன்படுத்து வதற்கு பாதுகாப்பானது,” என்று அது வலியுறுத்தியது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட இல்லங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி நீரையும் பிரதான குழாயிலிருந்து வெளியாகும் மாதிரி நீரையும் சோதனைச்சாலையில் சோதிக்கப்பட்டதில் ‘டெட்ராஹைட்ேராஃபியுரான்’ எனும் சேர்மம் ஒரு பில்லியன் நீரில் பத்து மடங்குக்கும் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பாசிர் ரிஸ், ஈசூன், தெம்பனிஸ் ஆகிய இடங்களில் உள்ள சில வீடுகளிலிருந்து காய்ச்சப்பட்ட குடிநீரிலிருந்து பாண்டான் வாசனை வருவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து கழகம் விசாரணையை மேற்கொண்டது. மலேசியாவிலும் சில வீடுகளில் இேதபோன்று பாதிப்பு ஏற்பட்டது. குழாய் நீரில் விசித்திரமான வாசனை வருவதை உணர்ந்த ஜோகூர் பாரு குடியிருப்பாளர்களும் வியப்படைந்தனர் என்று அங்குள்ள சில ஊடகங்கள் தெரிவித்தன.

சிங்கப்பூரின் தண்ணீர் தேவைக்கு மலேசியாவில் உள்ள லிங்யு நீர்த்தேக்கம் பிரதானமாக விளங்குகிறது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகள், மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீரிலிருந்துதான் விசித்திர வாசனை வந்திருப்பதைக் காட்டுகின்றன என்று கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

“விசாரணை முடியும்வரை பாதிக்கப்பட்ட நீரை ஒதுக்கிவைக்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் மலேசிய அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறோம். விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்,” என்று கழகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!