சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் பட்டியலில் கடைசியாக இடம்பெற்றி ப்பவர் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆவார்.
ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏவான தங்கபாண்டியனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருமித் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டன.
இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே தங்க பாண்டியனின் மனைவியும் மகனும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர்.

