சென்னையின் 10 ரூபாய் டாக்டர் மோகன்ரெட்டி காலமானார்

சென்னை: ஏழை மக்களுக்கு வெறும் 10 ரூபாயை வாங்கிக் கொண்டு மருத்துவச் சேவை புரிந்துவந்த டாக்டர் மோகன் ரெட்டி மரணமடைந்தார். அவரின் மறைவு வில்லிவாக்கம் பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

மருத்துவத்தை தனது உயிர் மூச்சாக நினைத்து, ஏழை நோயாளி களுக்கு 10 ரூபாய்க்கு சிகிக்சை அளித்து வந்த டாக்டர் மோகன் ரெட்டி, 84, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண் டாலும் உயிரிழந்தார்.

சென்னை வில்லிவாக்கம் பகுதி யில் மிகவும் பிரபலமான டாக்டராக விளங்கி வந்த மோகன் ரெட்டி, கொரோனா தொற்று நேரத்திலும் மக்களுக்கு தனது சேவையை விடாது தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப் பட்ட மோகன் ரெட்டி, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனு மதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு இல்லம் திரும்பினார்.

மீண்டும் மருத்துவச் சேவையைத் தொடங்க இருந்த நேரத்தில்தான் மோகன் ரெட்டி சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக அவரின் சகோதரர் எம்.கே.ரெட்டி தெரி வித்துள்ளார்.

1936ஆம் ஆண்டு நெல்லூரில் பிறந்த டாக்டர் ரெட்டி, மேல்படிப்பை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி யில் தொடர்ந்தார். மருத்துவராக பட்டம் பெற்ற பின்பு, வில்லிவாக்கத் தில் ‘மோகன் நர்சிங் ஹோம்’ என்ற மருத்துவமனையைத் தொடங்கி சேவை புரிந்து வந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!